டெல்லி:

ல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை ஆகஸ்டு 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சாத்தியக்கூறுகள் உள்ள அனத்து தேர்வு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்ககொண்டு, கல்லூரி  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரி கள் நடத்தி முடிக்க  வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

ஆனால்,  மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால்,  கல்லூரிகள், பல்கலைக்கழகத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று யுஜிசி வாதிட்டு வருகிறது.

இதற்கிடையில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த  31 மாணவர்கள் சார்பில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கை  நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது,  ம மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை யுஜிசி பின்பற்றாமல் செமஸ்டர் தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரினார்.

யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அலாக் அலோக் வாதிடும்போது, “செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களின் நலன் கருதியே தேர்வு நடத்தப்படுகிறது,  இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.

யுஜிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், ”செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதென்ற எண்ணத்துக்கு ஆட்படக்கூடாது. மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

யுஜிசியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்றும்,   மாநில பேரிடர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.