திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பாரதமாதா, இந்துமதம் குறித்து ஆணவமாக பேசிய மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு….

Must read

நாகர்கோவில்: பாரத மாதா, இந்துமதம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா  குறித்து அவதூறு பரப்பியதுடன், திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை என்று ஆணவமாகவும், அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மத போதாகர் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது இந்து மதத்தினர் மட்டுமின்றி, பாரத மாதாவையும் தரக்குறைவாகவும் அருவருப்பாகவும் பேசியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது பேச்சு குறித்து பல பகுதிகளில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்து அமைப்பினர் எச்சரிக்கை  விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது,  அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ்  ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது. நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள்.

பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான், மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும்.

நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து,  மத போதகர் போதாகர் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட மாநகராட்சி துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் போலீஸ் புகார் தெரிவித்துள்ளார். அதுபோல தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் பொன்னையா மீது புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  மத போதகர் ஜார்ஜ் பென்னையா மீது 7 பிரிவுகளில் அருமனை போலீசார்  வழக்குபதிவு  செய்துள்ளனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யவில்லை.

இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தினர் மட்டுமின்றி, தேச பக்தர்களும், திமுகவினரும் ஜார்ஜ் பொன்னைவின் ஆணவ பேச்சை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

மதத்தினரிரைடயே மோதலை உருவாக்கும் வகையிலும், தான் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்நாட்டை இழிவாபக பேசிய இதுபோன்ற நபர்கள்மீது தேசத்துரோக சட்டம்,  குண்டாஸ் சட்டம் பாயாதோ?

More articles

Latest article