Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

May 5, 2020

சென்னை:

தமிழகத்தில் வரும் 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து,  சென்னை உயர்நீதி மன்றத்தில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு மே 17ந்தேதி வரை அமலில் உள்ள நிலையில், மே 4ந்தேதி முதல் கடைகள் உள்பட பல தொழில் நிறுவனங்கள் செயல்பட தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

இதையடுத்து வரும் 7ந்தேதி முதல் சென்னைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகஅரசியல் கட்சிகள், பொதுநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைககளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தமிழகத்தில்  கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும், அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இதுபோல தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Post navigation

டாஸ்மாக் போர்க்குரல்… ஒழுக்கமும்.. நிதர்சனமும்..
போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்… தமிழகமுதல்வரின் தொலைக்காட்சி உரை விவரம்….

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer