சென்னை:
தமிழகத்தில் வரும் 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு மே 17ந்தேதி வரை அமலில் உள்ள நிலையில், மே 4ந்தேதி முதல் கடைகள் உள்பட பல தொழில் நிறுவனங்கள் செயல்பட தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
இதையடுத்து வரும் 7ந்தேதி முதல் சென்னைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகஅரசியல் கட்சிகள், பொதுநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைககளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும், அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இதுபோல தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.