சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் இன்று வெளியானது இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ரோகினி திரையரங்கில் இன்று காலை வெளியானது.

படத்தைப் பார்க்க டிக்கெட்டுடன் வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவருடன் வந்த குழந்தைகள் உள்ளிட்டவர்களை திரையரங்கிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது இதனைத் தொடர்ந்து யு /ஏ சான்றளிக்கப்பட்ட படத்திற்கு 2 முதல் 10 வயதுள்ள குழந்தைகளை அழைத்துவந்ததை அடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் வீடியோ ஆதாரத்துடன் திரையரங்க நிர்வாகம் தனது பதிவிட்டது.

இந்த நிலையில் திரையரங்க நிர்வாகம் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரோகினி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காதது ஏன் ? விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…