சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை தக்க வைக்க திமுக அரசும், ஆட்சியை கைப்பற்ற அதிமுக அரசும், மாறி மாறி இலவசங்களை வெளியிட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது பொதுமக்களை சோம்பேறியாக்கி வருவதுடன், பலர் குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் இணைய அடிமைகளாக மாறுவதற்கும், அதனால், வேண்டதகாத நிகழ்வுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. மேலும், பொதுமக்கள் இலவசங்களுக்க அடிமையாகி உழைத்து வாழ தகுதியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக அனைத்து வகையான பணிகளுக்கும் வடமாநிலத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் அரசியல் கட்சிகள் பொய்யான வாக்குறுதிகள் தரப்படுவதாகவும் , இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதால், அதனை தடை செய்யக் கோரியும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைககு இந்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தற்போது மனுவை ஏற்க முடியாது என்று கூறியதுடன், இந்த வழக்கை தேர்தல் முடிந்த பின் விசாரிக்கலாம் என கூறியுள்ளது.
[youtube-feed feed=1]