சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை  காவல்துறை அணையர்  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி குடும்பத்தினர் மற்றும் அவர் தெய்வமாக மதிக்கும் முதல்வர் குடும்பத்திலும் அப்படித்தானா என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், பொன்முடிக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த விவகாரத்தில் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,  சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி பொன்முடியின் பேச்சை வன்மையாக கண்டித்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிவேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்க டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.