பாலாறு வெள்ளம் – அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்….

Must read

** கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது பாலாறு நிரம்பி…!

இந்த அளவுக்கு சராசரியாக தமிழகம் எங்கும் 20 செ. மீ க்கும் மேலாக கன மழை பெய்து ஆயிரக் கணக்கான மக்களை வீடிழந்தவர்கள் ஆக்கி இருக்கிறது!

லட்சக் கணக்கான விவசாயிகளின் பயிர்களையும் அழித்து விட்டது!!

இதனால், ஒட்டு மொத்தமாக தமிழகத்துக்கு சுமார் 5000 கோடி ரூபாய் நிவாரண உதவி தேவை என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது!

வெள்ளப் பாதிப்புகளைக் பார்வையிட டெல்லியில் இருந்து வந்த ஒன்றிய அரசின் குழுவினரிடம் இந்த விவரங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லி அனுப்பி உள்ளார்!

“ஆனால்…, இதே போல் குஜராத் அல்லது உ. பி… ம. பி. மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், இந்நேரம் பிரதமர் மோடி அங்கெல்லாம் ஓடோடிச் சென்று அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து இருப்பாரே… ” என்று தமிழக மக்கள் ஆதங்கப் படுகிறார்கள்!!

** எதிர் வரும் நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அ. தி. மு. க. வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அவர்களின் கட்சித் தலைமையகத்தில் நடந்தது!

அக்கூட்டத்தில், ‘இட்டைத் தலைவர்கள்’ஓ. பி. எஸ்- ஈ. பி. எஸ் முன்னிலையிலேயே முன்னாள் அமைச்சர்கள் ஒருவரோடு ஒருவர் காரசாரமாக மோதிக் கொண்டதோடு, ‘ கைகலப்பு’ வரை சென்றிருக்கிறார்கள்!

** “எதிர் வரும் தேர்தல்களைப் பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு – இப்படி ‘ எதிரிக் கூட்டம் ‘நடத்தி விட்டார்களே”- என்கிறார்கள் மக்கள்!

** ஓவியர் இரா. பாரி.

More articles

Latest article