சென்னை: கோயம்புத்தூர் நகர வளர்ச்சி ஆணையம் அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அத்துடன், திருப்பூர், மதுரை, ஓசூர்  நகர் வளச்சி ஆணையமும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்த பகுதி  மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

கடந்த 22ந்தேதி 2 நாள் பயணமாக கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ஸ்டாலின், சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.

இதையடுத்து, கோயம்புத்தூர் நகர வளர்ச்சி ஆணையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, கோவை,  மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதிக்கு நகர வளர்ச்சி ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சம் அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையையேற்று கோவை நகரின் விரைவான வளர்ச்சிக்கு வித்திடும் பொருட்டு, ‘Coimbatore Urban Development Authority எனும் கோயம்புத்தூர் நகர வளர்ச்சி ஆணையம்’ அமைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களுக்கு கோவை மக்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் அரசாணைக்கு கோவை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.