டில்லி

த்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் டில்லி இல்லத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதி உள்ளது.

டில்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான  கிரண் ரிஜ்ஜூவின் வீடு உள்ளது. பிரதமர் மோடி மந்திரி சபையில் புவி அறிவியல் துறை அமைச்சராக இவர் பதவி வகித்து வருகிறார்.

அவர் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அருணாசலப் பிரதேச மேற்கு தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இன்றி அவரது இல்லத்தின் வாசலை ஒட்டிய பகுதியில் கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இதனால் அவரது இல்லத்தின் சுற்றுச் சுவர் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்ததோடு காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.  அமைச்சர் இல்லத்தின் மீது கார் மோதியதும், எச்சரிக்கை மணி ஒலித்தது.

பாதுகாவலர்கள் ஓடி வந்து காரை ஓட்டி வந்த ரகீம் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

இது குறித்து ரகீம்.

”நானும், எனது குடும்ப உறுப்பினர்களும் அரியானாவில் உள்ள நூ நகரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில், பேருந்து ஒன்று எங்களின் கார் மீது மோதியதால் கார் சாலையை விட்டு விலகி மத்திய அமைச்சரின் இல்லச் சுவரின் மீது மோதி நின்றது”

எனக் கூறியுள்ளார்.