சென்னை:
கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன்  கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவரது மகன் பிரவீன். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
தன்னுடைய நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தன்னுடன் படிக்கும் சுரேகா, மந்த்ரா, பெரியநாயகி, சுவேதா, திலக் ஆகியோருடன் ஈரோடு நோக்கி காரில் சென்றுள்ளார்.
untitled-1
காரை பிரவீன் ஓட்டியுள்ளார். அதிவேகமாக வந்த கார் அவினாசி அருகே பெருமாநல்லூர் அதியூர் பிரிவு ரோடு வழியாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியன் மீது மோதி சாலையின் மறுபுறம் பாய்ந்தது.
அப்போது, அந்த சாலை வழியாக, ஈரோட்டிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது, இவர்களின் கார் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கல்லூரி மாணவி சுரேகா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பிரவின் உட்பட அனைவரும் படுகாயம் அடைந்தனர். மேலும், இவர்கள் மோதிய காரில் இருந்த ஜோசப் மற்றும் லிங்கன் என்ற 2 பேரும் படுகாயம அடைந்தனர்.
அவர்களை அனைவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரவீன், காரை வேகமாக செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.