சென்னை: உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம் காரணமாக, பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஒபிஎஸ்-ஐயும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், அவரது எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பிடுங்கி உள்ளார். புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான கடிதத்தை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, இன்று சபாநாயகர் அப்பாவிடம் சமர்ப்பித்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் என்பது அந்த கட்சியின் விவகாரம். அது உள்கட்சி விவகாரம், அதில் நான் தலையிட முடியாது என தெளிவுபடுத்தினார். மேலும், எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலைபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுதொடர்பாக ஓபிஎஸ் அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
சபாநாயகரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சி துலைவர் பதவியும் ஓபிஎஸ் இடம் இருந்து பறிபோனது உறுதியாகி உள்ளது.