பழனி:

ஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்ததாக, உடுமலைப்பேட்டை கவுசல்யாவின் தாயும், பாட்டியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது உடுமலை கவுசல்யாவின் கணவர் சங்கர் ஆணவக் கொலை விவகாரம். இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கவுசல்யாவும் வேறொரு இளைஞரை மணம் முடித்துக்கொண்டு செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில்,  கவுசல்யாவின் தாய்  தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கவுசல்யாவின் சொந்த ஊர், பழனி அருகே குப்பம்பாளையம். இந்த பகுதியில் கவுசல்யாவின் பாட்டி கோதையம்மாள் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோதையம்மாள் வீட்டில் இருந்து, ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா எடுக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்டவிசாரணையில், தனது மகள் அன்னலட்சமி தான் விற்பனை செய்ய தன்னை வலியுறுத்தியதாக கூறினார்.

இதன் காரணமாக அன்னலட்சுமியும் கைது செய்யப்பட்டார். இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார்,  இரவோடு இரவாக மதுரை கொண்டு சென்ற, அங்குள்ள  பெண்களுக்கான தனிச்சிறையில் அடைத்தனர்.