சென்னை:

“கட்சிப் பொதுச்செயலாளர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. பொதுச்சயலாளர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று சசிகலா ஆதரவாளர்கள் பேசி வந்தனர்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதமன்றம் தலா நான்கு வருட தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்துள்ளது.

இதனால் சசிகலா முதல்வர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த பத்து வருடங்களுக்கு இவர் தேர்தலிலேயே நிற்க முடியாது.

ஆகவே தற்போது அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதாவது அவரை முதல்வராக முன்னிறுத்தியிருக்கிறது சசிகலா தரப்பு. இந்த நிலையில் ஓ.பி.எஸ். தரப்பினர் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

அதாவது, “கட்சிப் பொதுச்செயலாளர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. பொதுச்சயலாளர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று சசிகலா ஆதரவாளர்கள் பேசி வந்தனரே…

இப்போது சசிகலா முதல்வர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமியையே கட்சி பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுப்பார்களா” என்று கேட்கிறார்கள். இதற்கு சசிகலா தரப்பில் கடும் மவுனமே நிலவுகிறது.