நியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க கூட அவர் பயந்து இருக்கிறார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டறிந்தது.  அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது அம்பலமானது.

இந்த திருட்டு குறித்து அதன் நிறுவனர் மார்க் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று அமெரிக்காவில்நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது மார்க் தான் செய்த குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டார். அதோடு மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.

இந்த விசாரணையில் மார்க்கிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன.  அவரை விசாரித்த வழக்கறிஞர் டிக் டுர்பின், பேஸ்புக் திருட்டு குறித்து கோபமாக பல கேள்விக்கணைகளைத் தொடுத்தார். “பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவல்கள் தேர்தலில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதா இல்லை வேறு விஷயங்கள் எதிலும் கூட பயன்படுத்தினீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மார்க் ”பொதுவாக பேஸ்புக்கில் என்ன கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க கூடாது என்பதை தேர்வு செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் அளிக்கும் தகவலை கட்டுப்படுத்த அவர்கள் நினைத்தால் முடியும். இதில் நாங்கள் அவர்கள் தகவலை கட்டாயப்படுத்தி திருடவில்லை” என்று பதில் அளித்தார்.

ஆனால்  பல கேள்விகளுக்கு மார்க் சரியாக பதில் அளிக்கவில்லை.  முக்கியமாக தன்னை குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். நேற்று எந்த ஹோட்டலில் தங்கி இருந்தீர்கள் என்ற கேள்விக்குகூட, நீண்ட நேரம் யோசித்துவிட்டு, ” சொல்ல முடியாது” என்று மறுத்துவிட்டார்.

:தன்னுடைய சொந்த விவரத்தை வெளியிட மிகவும் பயப்படும் ஒருவர்தான்,  மக்களின் தகவலை திருடி இருக்கிறார்” என்ற விமர்சனம் இப்போது எழுந்துள்ளது.