பெங்களூர்:
சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார்.
தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இரு மாநில அரசுகளும் தற்போதைய தண்ணீர் தேவை மற்றும் தண்ணீர் இருப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தன.
ritha
இதற்கிடையே உயர் தொழில்நுட்பக் குழுவினரும் தமிழ்நாடு, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு அறிக்கையை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
மத்திய அரசு வக்கீல் முகுல் ரோத்தகி, கர்நாடகா அரசு சார்பில் மூத்த வக்கீல் பாலிநாரிமன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், “காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த புதிய உத்தரவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாண்டியா, மைசூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும் காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்று அறிவித்துள்ளார்.
cauver
இது தொடர்பாக அவர் நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:
கர்நாடகா அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லை. எனவே தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? ஆகையால் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடம் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள உத்தரவு நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் வக்கீல்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.
அதன் அடிப்படையில் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.
தற்போது கர்நாடகா கூறுவதுபோல், ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரான நிலை எடுத்தால் இந்தியாவின் நிலை என்னவாகும்….