நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் பூட்டப்படும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் திருப்பதிக்கு சென்றவர்கள் கூட தலைதெறிக்க ஓடிவந்த நிலையில். எந்தஒரு முன்னேற்பாடும் செய்யமுடியாமல் அல்லாடியவர்கள் ஏராளம்.

இதில் தொலைக்காட்சி சேனல்களில் மழுங்க மழுங்க முகச்சவரம் செய்துகொண்டு பேட்டியெடுப்பவர்களும் பேட்டிகொடுப்பவர்களும் படும் அவஸ்தை வினோதமானது.

தினந்தோறும் முகச்சவரம், ஒரே சீரான தலைமுடி என்று தங்கள் தோற்றத்தை பராமரித்து கேமரா முன்னாடி நின்றவர்கள் எல்லாம், இப்போது அரைகுறையாய் வந்து நிற்கவேண்டி உள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நெறியாளர் சீனிவாசன் ஜெயின், “முடிதிருத்தும் சலூன்கள் அத்தியாவசிய தேவையில் வருமா ?” என்று கேள்வியெழுப்பி இருந்தார்.

இந்த டிவீட்க்கு பதிலளித்த சச்சின் பைலட், “இந்த கேள்வி முன்னாடியே கேட்டிருந்தா, எனக்கும் உதவியா இருந்திருக்கும், நான் வீட்டிலேயே அரைகுறையா வெட்டிக்கிட்டேன்” என்று தாமதமாக கேள்விகேட்கும் பத்திரிகையாளர்களை நகைச்சுவையாக கிண்டலடித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.