சென்னை:தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு வரும் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக  1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  இடைநிலை ஆசிரியர்(2023-24) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான http://www.trb.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: விராட் கோலி தொடர்பாக தவறான தகவலைக் கூறி மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன்: ஏபி டி வில்லியர்ஸ் மேலும், விண்ணப்பதாரர்கள் பிப். 14 முதல் மார்ச். 15 ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.