டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.
தனக்கு எதிரான இந்த வழக்கில் தானே வாதாடி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறையின் முக்கிய நோக்கம் என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பது தான்” என்று கூறினார்.
“விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை இயக்கி வருகிறார்கள், இதுதான் உண்மையான ஊழல்
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரத் சந்திர ரெட்டி பாஜகவுக்கு ₹55 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்த மோசடிக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
அவர் கைது செய்யப்பட்ட பிறகு பாஜகவுக்கு 50 கோடி நன்கொடை அளித்துள்ளார்” என்று கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிலரின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டுமே பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய முடியுமா ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட மூன்று அறிக்கைகளை அமலாக்கத்துறை தரப்பில் சமர்ப்பித்துள்ளனர் ஆனால் அவை எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?” என்று அவர் பேசினார்.
“ED இன் ஒரே நோக்கம் என்னை சிக்க வைக்க வேண்டும்” என்பது தான் “மேலும், ED க்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஆம் ஆத்மியை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் திரைமறைவில் பணம் வசூலிப்பதற்காக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை ஏவுவது” என்று டெல்லி முதல்வர் குற்றம் சாட்டினார்.
“நான் காவலில் வைப்பதை எதிர்க்கவில்லை. ED என்னை அவர்கள் விரும்பும் வரை காவலில் வைத்திருக்கட்டும். ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவேண்டியது அவர்களின் கடமை” என்று அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் வாதாடினார்.