தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மும்முனை மின்சாரம், ஜெனரேட்டர், சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் 55000 சதுர அடியும், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் 63000 சதுர அடியிலும் கட்டப்பட்டிருக்கும் இந்த மினி டைடல் பார்க்கில் அலுவலகம் அமைக்க விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து marketing@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் கட்டப்பட்டுள்ள இந்த டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க முன்வரும் நிறுவனங்களுக்கு வாடகையில் சலுகை தரப்படும் என்று அறிவித்துள்ளது.