ங்களூரு

காணாமல் போனதாக கூறப்பட்ட கஃபே காஃபி டே அதிபர் வி ஜி சித்தார்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின் மருமகனான வி ஜி சித்தார்த்தா புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். கஃபே காஃபிடே என்னும் புகழ்பெற்ற காபித்தூள் விற்பனை நிலையத்தை தொடங்கிய இவர் அத்துடன் வேறு பல தொழில்களையும் நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு முதல் சித்தார்த்தா காணாமல் போனார்.

இவருக்கு தற்சமயம் நிதி நெருக்கடி உள்ளாதாக கூறப்படுகிறது. சுமார் 3 தினங்களுக்கு முன்பு சித்தார்த்தா தனது தொழில் கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதத்தைல் நிறுவன சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்து நிறுவனக் கடனுக்கு மன்னிப்பு கோரி உள்ளார். அவர் அளித்த சொத்துப் பட்டியலின்படி கடனை விட அதிக அளவில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடைசியாக மங்களூரு அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் சித்தார்த்தா காணப்பட்டதால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது. அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் சுமார் 36 மணிக்கும் மேலாக தொடர்ந்து நடந்தது.

நேத்ராவதி நதியில் 36 மணி நேர தேடலுக்கு பிறகு சித்தார்த்தாவின் உடல் இன்று காலை தட்சின கர்நாடகா மாவட்டத்தில் கிடைத்துள்ளது. அவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவர் உடல் கிடைத்த இடம் அவர் காணாமல் போனதாக கூறப்படும் பாலத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் உள்ளது.