சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெறுகிறது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில்
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும், ஆன்-லைன் விளையாட்டிற்குத் தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.