டில்லி:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக சென்னை, லக்னோ மற்றும் கவுகாத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு  பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது சென்னை உள்பட லக்னோ மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்திற்கு  ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும்  வேளாண் துறையில் உள்ள 11 திட்டங்களை ஒருங்கிணைந்து ஒன்றாக மாற்றும் பசுமை புரட்சி – கிரிஷோனாதி யோஜனா திட்டம், வணிக பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வழிசெய்யும் சட்டதிருத்த மசோதா ஆகிவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.