டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது:  சொந்த கட்சி நலனுக்காக மமதா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால், பாஜக அனைவரின்  வளர்ச்சிக்காக பணியாற்றும் கட்சி.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை அனைவரும் பெறுவீர்கள்.  நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். மேலும் 2021ம் ஆண்டு தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.