சென்னை:
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
tccoffice
இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பணியாற்ற உள்ளது. இதற்காக 3 தொகுதி களிலும் தனித்தனி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 13 பேர் கொண்ட குழுவும்,
தஞ்சை தொகுதிக்கு முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவும்,
அரவக்குறிச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.