ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ந்தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி காலமானரைதத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ந்தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 77 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.. இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றுமுதல் 3 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் சுற்றிவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.