ம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால்  தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர்  இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல.
2016 சட்டமன்ற  தேர்தலில் வாக்களித்த தமிழக வாக்காளர்களை சில நாட்களுக்கு முன் ஒரு பிடி பிடித்திருந்தார் அவர்.  திமுகவைத் தோற்கடித்த  மக்களை, “மந்தை ஆடுகள்”  என வர்ணித்திருந்தார்.
ஜெயலலிதா இரண்டாம் முறையாய் தொடர்ந்து ஆட்சி அமைக்க உதவிய இந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி வெளிப்படையாகவே கருணாநிதிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. அவரது அறிக்கையில் ஆடுகள், கசாப்புகடைக்காரனையே நம்புகின்றன என ஆதங்கத்துடன் சொல்லியிருந்தார் கருணாநிதி.
பிறகு தனது  பிறந்தநாள் செய்தியிலும் இதே  கருத்தை மீண்டும் வலியுறுத்தி கூறியிருந்தார்.
karunanidhi birthday goat redpix (1)
கருணாநிதி குறிப்பிடுவது போல் தமிழக மக்களாகிய நாம், பலிபீடத்திற்கு வழிவகுக்கும் கசாப்புக்கடைக்காரன் காட்டிய வழியைத்தான்  பின்பற்றுகின்றோமா ?  எது நல்லது எது கெட்டது தெரியாத அளவிற்கு மடையர்களா நாம் ?
கருணாநிதியின்  கருத்திற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,  “கருணாநிதிக்கு இம்மாதிரி மக்களை குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது” என்றார்.
2007 ஆம் ஆண்டு கருணாநிதியின் 84வது பிறந்த தினத்தின் போது நடந்த ஒரு துணுக்கு சம்பவம் நமக்கு  நினைவிற்கு வருகிறது.
வழக்கம் போல அன்றும் தங்கம் வெள்ளி எனப் பரிசுப் பொருட்களை வாங்கிக்குவித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த திமுக விசுவாசி ஒருவர்,    கருணாநிதியின் கவனத்தை ஈர்த்திட  ஒரு ஆடு பரிசளிக்க எடுத்து வந்திருந்தார்.
மேடைக்கு ஆட்டை அவர் அழைத்துவந்தார். ஆட்டினை சற்று தலை வணங்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த ஆடு அதற்கு உடன்படவில்லை.  அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மேடையை விட்டு  ஓடிவிட்டது.
இதைப்பார்த்த கருணாநிதியின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஆம்..  உண்மையில் நடந்த  சம்பவம் இது.
வினைப்பயன் எனும் கர்மா என்பது இந்த குட்டி ஆட்டைப் போன்றது. தனக்கு என்ன நிலைமை ஏற்படப்போகின்றது என்பதை நன்குணர்ந்த ஆடு தப்பிப்பிழைத்தது. அது  போலத்தான் தமிழக மக்களும் தங்களை யார் ஆள வேண்டும் என்பதை முடிவுசெய்தனர்.
தமக்கு யாரால் ஆபத்து, தாம் யாரை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்பத உணர்ந்த ஆடுகள் தான் தமிழக மக்கள் என்பதை கருணாநிதி  உணரவேண்டும்.
ஆனால் தனக்கு ஆடுகள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் என்பதை புரிந்துகொள்ளும் நிலைமையில் அவர் இல்லை.
அதே  போல் இன்னொரு சம்பவம்  கருணாநிதியின் 91வது பிறந்த தினத்தின் போதும் நடந்தது.  அன்று கனிமொழி வீட்டில் வைத்து, கருணாநிதிக்கு  ஆடு ஒன்று பரிசளிக்கப்பட்டது. அந்த ஆட்டின் மேல் கருணாநிதி மற்றும் ஸ்டாலினின் படம் உள்ள போஸ்டர் போர்த்தப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் அவர்கள்  இருவரும் பலியாடு ஆக்கப்படுவார்கள் எனும் செய்தியை முன்கூட்டியே பறைசாற்றியதோ அந்த நிகழ்வு ?
(கட்டுரை நன்றி: http://www.thenewsminute.com/)