மும்பை: வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டகளத்தில் அதிக சக்தியை செலவிடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், அவர்களுக்கு வெகுமதியாக விமானப் பயணத்தின்போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.

இது, வேகப்பந்து வீச்சாளர்களின் பயணக்களைப்பைக் குறைத்து புத்துணர்ச்சியுடனிருக்கவும் வழி வகுக்கிறது.

விசாகப்பட்டினம் டெஸ்ட் தொடருக்குப் பின் முகமது ஷமி இத்தகைய அந்தஸ்தைப் பெற்று விமானத்தில் சொகுசாக பயணித்தார். அதன் பின் இஷாந்த் ஷர்மா இவ்வாறு சொகுசு பயண வாய்ப்பினைப் பெற்றார்.

அளவீடு என்னவென்றால், சமீபத்தில் யார் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பிஸினஸ் வகுப்பு கிடைக்கும் என்பதே. இதனை அணி நிர்வாகமே முடிவு செய்கிறது.
அத்துடன், அணி நிர்வாகம் இன்னொரு முடிவையும் எடுத்துள்ளது. அது துணை கேப்டனுக்கு தங்கும் ஹோட்டலில் பெரிய அறையை வழங்குவதாகும்.

முன்னதாக மூன்று பெரிய அறைகள் தரும் வகையில் ஹோட்டல்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து அதில் இரண்டில் தலைமைப் பயிற்சியாளரும் கேப்டனும் தங்குவது போக ஆட்டநாயகனுக்கு ஒன்று என்று இருந்ததை தற்போது அணிக்காக பங்களிப்பு செய்வதில் இரண்டாவது முக்கிய நபர் என்ற வகையில் துணை கேப்டனுக்கு இது அளிக்கப்படுகிறது.