பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்களால் தொடரும் விபத்துக்கள்!

Must read

அரியலூர்,

மிழக பொக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக அரசு தனியார் பேருந்துகளையும், தற்காலிக பஸ் ஓட்டுநர்களையும் வைத்து பஸ்களை இயக்கி வருகிறது.

தற்காலிக பஸ் ஓட்டுநர்களால் சிறுசிறு விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இன்று அதிகாலை  அரியலூர் அருகே தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசு பேருந்து விபத்துக்குள்ளானதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர் ஓருவர் அதனை பின்னோக்கி இயக்கியபோது அந்த பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

100 அடி பின் நோக்கி வந்த அந்த பேருந்து பயணிகள் உடன் புறப்பட காத்திருந்த மினி பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கினர்.

இந்த விபத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கனவே நேற்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் தற்காலிக ஓட்டுநர் பஸ்சை இயக்கி மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article