ஒரே நேரத்தில் 1,400 பேர் வரை பயணம் செய்யும் பிரம்மாண்ட பேருந்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உயர் பயணப் பேருந்து (Transit Elevated Bus) என்று பேரிடப்பட்ட இந்த பேருந்து சாலையில் கார்கள் சென்றாலும் அதன் மேலாக செல்லும் வகையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பேருந்து நிறுத்­தத்­தி­லும் இந்தப் பேருந்துகள் நிற்­கும்­போது விமா­னத்­தில் இருப்­பதைப் போல படிக்­கட்­டு­கள் பக்­க­வாட்­டில் இறங்­கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு எந்த இடையூறுமின்றி அதன் வழியாக பய­ணி­கள் ஏறி இறங்க­லாம். இப்பேருந்து மணிக்கு 60கிமீ வரை செல்லும் என்று தெரிகிறது.

[embedyt] http://www.youtube.com/watch?v=fVHIKhBYDho[/embedyt]

15 அடி உயரமும், 21 மீட்டர் நீளமும் 7 மீட்டருக்கு மேல் அகலமும் உள்ள இந்த பேருந்தின் அடிப்பகுதி வழியாக மற்ற வாகனங்கள் தடையின்றி புகுந்து செல்லமுடியும். கிட்டத்தட்ட ஒரு சுரங்கப்பாதை போல இருக்கும் இப்பேருந்தை தயாரிக்க ஆகும் செலவு சுரங்கப்பாதை உருவாக்க ஆகும் செலவைவிட மிகக்குறைவு ஆகும்.
பேருந்தின் சோதனை ஓட்டம் முதல்­கட்­ட­மாக சீனாவின் கின்­ஹு­வாங்­டாவ் என்ற இடத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் 300 மீட்டர் பாதையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
China unveiled the design concept for a new-age ‘straddling bus’ also called as transit elevated bus