மைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான் அவர்.  இவரது தலைமையிலான இசைக்குழு உலகம் முழுதும் சென்று பாடி புகழ்பெற்றது.  அவரது இசை ஆல்பங்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன.
53 வயதான   மைக்கேலுக்கு போதைப் பழக்கம் காரணமாக உடல் நலிவுற்றது. இதையடுத்து நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.  இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
ஏற்கெனவே, போதை மருந்து உட்கொண்டு வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக சிறைதண்டனை அனுபவித்தவர் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
அதீத திறைமை படைத்த பாடகரான ஜார்ஜ், போதைப் பழக்கத்தால் உடல் நலிவுற்று மரணமடைந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.