டில்லி,
த்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது வி.வி.ஐ.பிக்களின் உபயோ கத்துக்காக நவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது.  அப்போது இந்திய விமானப்படை தளபதியாக இருந்த தியாகி என்பவர்மீது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சிபிஐ கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பிக் களுக்கு அந்த நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக 2013-ல்  முன்னாள் இந்திய விமானப்படை  எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த ஹெலிகாப்டர் வாங்குவது குறித்து முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமானப்படை தளபதியுடன், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனர் வான்ச்சூ, மத்திய அரசின் உளவுத்துறை இயக்குனராக இருந்த நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் காரணமாக அவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது.  அதைத்தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு ஏதுவாக,  தாங்கள் வகித்து வந்த கவர்னர் பதவிகளை நாராயணனும், வான்ச்சூவும் ராஜினாமா செய்தனர்.
ஆனால், நரசிம்மன் ராஜினாமா செய்யவில்லை. அவர் ஆந்திர மாநில கவர்னராக பதவி வகித்து வந்த அவரிடமும்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், இத்தாலியில் உள்ள கோர்ட்டில், இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்தது உறுதியானதால், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இத்தாலி கோர்ட்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
மேலும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் கோர்ட்டு உறுதி செய்தது.
இதையடுத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் முடுக்கி விட்டது. ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலை நேரில் ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. உத்தரவிட்டு இருந்தது. நேரில் ஆஜரான அவரிடம்  சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசா ரணை நடத்தினர்.
தொடர்ந்து , அப்போதைய விமானப்படைத் தளபதியாக இருந்த  எஸ்.பி.தியாகியை திங்கட்கிழமை நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. உத்தரவிட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ கோர்ட்டில் ஆஜரான எஸ்.பி.தியாகிக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான ஜாமீன் பத்திரம் பெற்று அவரை ஜாமீனில் விடுவித்தது.
தியாகி மீது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம்,  இந்திய ஒப்பந்தத்தை பெறும் வகையில், ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப, அதாவது 19 ஆயிரம் அடி உயரம் என்பதை 15 ஆயிரம் அடியாக குறைத்ததாக எஸ்.பி.தியாகி மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.