டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  காலை 10.45மணி அளவில்  மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் . அவர் இன்று  மதுபனி கலைக்கும், பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமைக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சேலை அணிந்துள்ளார்.

முன்னதாக மத்திய நிதி நிலைஅறிக்கைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் அமர்வான இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக,  அவர் குடியரசு தலைவரை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு குடியரசு தலைவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற  பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

முன்னதாக மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்துஅதிகாரிகளுடன் புறப்பட்டு நாடாளுமன்றம் வருகை தந்தார் நிதியமைச்சர் சீத்தாராமன். அவருடன் நிதி தொடர்பான இணை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடன் வந்தனர்.

இந்த நிகழ்வின்போது,  நிர்மலா சீத்தாராமன்,  மதுபனி கலைக்கும், பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமைக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சேலை அணிந்து கவுரப்படுத்தி உள்ளார்.

மிதிலா கலை நிறுவனத்தில் கடன் வழங்கல் நடவடிக்கைக்காக எஃப்.எம் மதுபனிக்குச் சென்றபோது, ​​அவர் துலாரி தேவியை சந்தித்து பீகாரில் உள்ள மதுபனி கலை குறித்த அன்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். துலாரி தேவி சேலையை வழங்கி, பட்ஜெட் நாளுக்கு அதை அணியுமாறு நிதியமைச்சரைக் கேட்டுக் கொண்டார். அதை நிறைவேற்று வகையில் இன்றைய பட்ஜெட் அமர்வுக்கு, மதுபனி கலைக்கும், பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமைக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சேலை அணிந்து கவுரப்படுத்தி உள்ளார்.

துலாரி தேவி 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.