பி.டி.எஸ். இசை குழுவின் ஜின் பிறந்தநாளுக்கு ‘ஹாப்பி பர்த்டே பி.டி.எஸ்.’ என்று எழுதிய கேக்கால் ரசிகர்கள் குழப்பம்

Must read

தென் கொரிய பாப் இசை குழுவான பி.டி.எஸ். (BTS) இசை குழு ‘பி.டி.எஸ். ஆர்மி’ என்ற பெயரில் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளது.

நியூயார்க் நகரில் தற்போது இசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் இவர்களின் நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் பெருமளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏழு பேர் கொண்ட இந்த குழுவில் இடம்பெற்றுள்ள மிகவும் மூத்த இசைக்கலைஞரான கிம் சியோக் ஜின் டிசம்பர் 4 ம் தேதியான இன்று தனது 29 பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கேக்-கில் ‘ஹாப்பி பர்த்டே ஜின்’ என்பதற்கு பதிலாக ‘ஹாப்பி பர்த்டே பி.டி.எஸ்.’ என்று எழுதப்பட்டிருந்தது பி.டி.எஸ். ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் தங்களது இசைநிகழ்ச்சி முடிந்த பிறகு தென் கொரியாவில் தங்களது நிகழ்ச்சிகளை நடத்த இருக்கும் பி.டி.எஸ். . அமெரிக்க ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசாக அவர்களது சூப்பர் ஹிட் பாடலான பட்டர் பாடலை வெளியிட்டனர்.

பட்டர் பாடலுக்காக ஆசியாவின் சிறந்த இசை கலைஞர்களுக்கான விருதை வென்றுள்ள இந்த குழு தங்களது பயண தேதி காரணமாக விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

More articles

Latest article