பெங்களூரு:
கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்பட எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர். .

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17ந்தேதி வரை 3வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த 4ந்தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, கொரோனா நிவாரணம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்பட மாநில அமைச்சர்கள், பல கட்சித்தலைவர்கள், அதிகாரிகள்  கலந்துகொண்டனர். எதிர்க்கட்சியினர் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில்  ஏற்கனவே ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோ சனை நடத்திய முதல்வர்எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.