ஜியோவுக்கு போட்டியாக குதித்தது பி.எஸ்.என். எல்.:  ஒரு ரூபாய்க்கு ஒரு ஜி.பி. இண்டர்நெட்!

Must read

டில்லி:
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே  கட்டணம் செலுத்தும்படியாக  புதிய பிராட்பேண்ட் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.  இதன்படி பிராட்பேண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.249-க்கு அன்லிமிட்டெட் இன்டர்நெட் சேவையை  பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ரூ.50-க்கு ஒரு ஜி.பி.,  4ஜி டேட்டாவை அளிப்பதாக அறிவித்தது.  “தனியார் நிறுவனம் இந்த அளவுக்கு குறைவான விலையில் 4ஜி டேட்டா அளிக்கும்போது, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தரமுடியாதா” என்ற விமர்சனம் சமூகவலைதளங்களில் எழுந்தது.  இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் என  புதிய பிராட்பேண்ட் சலுகை திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல் வெளியிட்ட செய்தி குறிப்பில் , மிகக்குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் இன்டர்நெட் வழக்கும் சலுகை திட்டத்தை வரும்  ஒன்பதாம் அறிவிக்க இருப்பதாக அந்த நிறுவன தெரிவித்துள்ளது.
download
‘எக்பிரியன்ஸ் அன்லிமிட்டடு பிபி 249’ என்ற அந்த திட்டத்தின் படி ,மாதந்தோறும் ரூ.249-கட்டணத்திற்கு எவ்வித வரம்பும் இல்லாமல் இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த திட்டதின்படி , முதல் 1 ஜி.பி-க்கு 2 எம்.பி.எஸ் வேகமும் அதன் பிறகு 1 எம்.பி.எஸ் வேகமும் இருக்கும் என பி.எஸ்.என்.எல்.  நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜி.பி. டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜி.பி. இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்திருக்கிறது.
எனினும், இந்த திட்டம் ஒரு அறிமுகச்சலுகை மட்டுமே என்பதையும் , பி.எஸ்.என்.எல் நிறுவனம்  தெளிவாக கூறியிருக்கிறது.

More articles

Latest article