புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு, சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளன பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்.

மத்திய அரசின் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 20ந் தேதி வரை ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது.

வாடிக்கையாளர் எண்களுக்கு ரூ.10 வரை டாக்டைம் சேர்க்கப்படுகிறது. அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சார்பில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடையும் காலம் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இன்கமிங் அழைப்புகளை தடையின்றி பெறமுடியும். இத்துடன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.