டெல்லி:  இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என  எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

அதுபோல, அமிர்தசரஸ் அருகே ஒருவரும், நேற்று பிற்பகலில் குர்தாஸ்பூர் அருகே ஒருவரும் சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து உள்ளனர். அவர்களை பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று ஊடுருவல் முயற்சிகளும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.