சென்னை: பிராட்வே பேருந்து நிலை​யம்  நாளை இடமாற்​றம்  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  அது,  தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது.

“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியான பிராட்வேயில், பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன், சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டது.  தற்காலிக பேருந்து நிலையம், பிராட்வே பேருந்து நிலையத்தில் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், அங்கு உடனே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள்  அரசின் இந்த முடிவை விமர்சித்தனர்.

இந்த நிலையில், பேருந்து நிலையம் இடம்மாற்றம் செய்வது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற நோக்கில்  பேருந்து நிலைய இடமாற்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் வெளி​யிட்ட அறிக்​கையில்,  பிராட்வே பேருந்து நிலை​யத்​திலிருந்து இயக்​கப்​பட்டு வரும் பேருந்​துகள் நாளை முதல் (ஜன.7-ம் தேதி) தீவுத்​திடல் மற்​றும் ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யங்​களி​லிருந்து இயக்​கப்​படும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டது.

நிர்​வாக காரணங்​களால் இந்த பேருந்து நிலை​யம் இடமாற்​றம் தற்​காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​கிறது. மாற்​றுத் தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும். பிராட்வே பேருந்து நிலை​யம் தொடர்ந்து செயல்​படும்.

இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி – 7ந்தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையம் அறிவிப்பு…

[youtube-feed feed=1]