ண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 965 கிலோ மீட்டர் அதிகம் பயணித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணிகள் தாங்கள் எங்கு இறங்கப்போகிறோம் என்று அறியாத நிலையில், எடின்பர்க் நகருக்குப் உங்களை வரவேற்கிறோம் என்று விமானி பயணிகளை வரவேற்று அறிவித்ததை தொடர்ந்தே, விமானம்  ,  டசோல்டோர்ஃபர் நகருக்கு பதிலாக விமானம் எடின்பர்க்கில் தரையிறங்கி இருப்பது தெரிய வந்தது.

முதலில் இதை நம்ப மறுத்த பயணிகள், விமானி தமாஷ் செய்கிறார் என்றே நினைத்தனர். ஆனால், விமானத்தில் இறங்கும்போதுதான், அவர்கள் இடம்மாற்றி அழைத்து வரப்பட்டது தெரிய வந்தது.

விமானிக்குத் தவறான பயணப் பாதை கொடுக்கப்பட்டதால் இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானி, இது எப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியதாக பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததே இல்லை என்றும் அவர் சொன்னார். இதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் விமானப் பணியாளர்கள் யோசித்து வருவதாக விமானி உறுதியளித்தார்,”

நடந்தது குறித்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுக்காக மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.

இதற்கு காரணம், விமானத்தை நடத்தி வரும் துணைஒப்பந்த நிறுவனத்தின் தவறான வழி காட்டுதல் காரணமே என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,  தவறான விமானத் திட்டம் ஏன் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி உறுதிபடுத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

“வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்திற்கான இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் நிறுவன அதிகாரிகள்  தனித்தனியாக தொடர்புகொள்வார்கள்,  இந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது  பிரிட்டிஷ் ஏர்வேஸ்.