லண்டன்

பாஜக கூட்டணி அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாத கிங்ஃபிஷர் உள்ளிட்ட நிறுவன அதிபர் நாட்டை விட்டு ஓடி லண்டனில் அடைக்கலம் புகுந்தார். அவரை அங்கிருந்து நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அந்நாட்டு உள்துறைக்கு பரிந்துரை செய்தது. உள்துறை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்றொரு விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது மிகவும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அதை ஒட்டி மத்திய அரசு பொதுதுறை வங்கிகள் அந்த விமான நிலையத்துக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டது. அதனால் அந்த நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி அந்த நிறுவனத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளது.

இது குறித்து விஜய் மல்லையா தனது டிவிட்டரில், “நான் எனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களின் நலனுக்காக ரூ.4000 கோடி வங்கிகளில் சேமிப்பு வைத்திருந்தேன். அதை அங்கீகரிக்காமல் என்னை முடிந்தவரையில் வங்கி நிர்வாகம் அரசு கொடுமைப்படுத்தியது.

அதனால் ஒரு தலை சிறந்த விமான நிறுவனம் அதன் சிறப்பு வாய்ந்த ஊழியர்களுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்ப்பட்டு கடும் பாதிப்பில் இரு தரப்பினரும் ஆழ்த்தப்பட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரபட்ச நடவடிக்கை இது.  பாஜக ஆட்சியில் ஆளுக்கு ஆள் நீதி மாறுகிறது” என பதிந்துள்ளார்.