ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
வரலாற்றில் நாம் ஒரு சிக்கலான பாதையில் உள்ளோம், இந்த முக்கியகட்டத்தில் நாம் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறங்கியுள்ளார். ஆனால் அவர் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கலந்தாலோசிக்காமல் ரஷ்யா உடன் முதலில் பேச்சுவார்த்தையை நடத்தியது அமெரிக்காவின் மத்தியஸ்தம் மற்றும் நடுநிலை குறித்து விமர்சனங்கள் எழுந்தது.
அதேவேளையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இந்த போருக்காக அமெரிக்கா இதுவரை செலவழித்த தொகைக்கு ஈடாக உக்ரைனின் கனிமவளங்களை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உக்ரைன் அதிபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
ஆனால், டிரம்பின் இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்து சர்வதேச ஊடகங்கள் முன் ஜெலன்ஸ்கி பொங்கி எழுந்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
அதேவேளையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசிய நிலையில், ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் என்று உறுதியளித்தார்.
மேலும், வரலாற்றில் நாம் ஒரு சிக்கலான பாதையில் உள்ளோம், இந்த முக்கியகட்டத்தில் நாம் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.