உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சர்வதேச ஊடகங்கள் முன்பாக விமர்சித்தது டிரம்புக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்க்கப்படுகிறது.

ஜெலன்ஸ்கியின் இந்த முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் உக்ரைனின் கனிம வளங்களை தன் வசப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த போருக்காக அமெரிக்கா இதுவரை செலவு செய்த பணத்தை எப்படி திரும்ப வாங்குவது என்பது குறித்த விவாதங்கள் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில் அதே மாதிரியான சுமூக பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா செய்ய இருந்த முதலீடு நின்றுபோனதை அடுத்து போர் நிறுத்தம் மட்டுமன்றி உக்ரனின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ உடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்ததுடன் இந்த செய்தியாளர் சந்திப்பை தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்ட ஜெலன்ஸ்கியின் நடவடிக்கையால் நம்பகத்தன்மை இழந்த ஒரு தலைவராகவே அமெரிக்க மக்கள் முன் நிற்கிறார்.

அதேவேளையில், உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட இந்த டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பை அடுத்து வார விடுமுறைக்குப் பிறகு முதல்முறையாக இன்று அலுவலகம் வர உள்ள அதிபர் டிரம்ப் எடுக்க இருக்கும் முடிவு அல்லது அறிவிப்பு குறித்து அமெரிக்கர்கள் மட்டுமன்றி உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது.

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் பேச்சு