கிர்கிஸ்தானில் சிக்கி தவிக்கும் 800மருத்துவ மாணவர்களை உடனே மீளுங்கள்… கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கோரிக்கை

Must read

கிர்கிஸ்தான்:

கிர்கிஸ்தான் நாட்டில்  தங்கி மருத்துவம் படித்து வரும் 800 தமிழக மாணவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் பொன்.கவுதம் சிகாமணி (Dr pon.gauthamsigamani M.S (ortho) ,MP) தமிழக முதல்வர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், கிர்கிஸ்தான் தூதரக அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கிர்கிஸ்தானில் தங்கி மருத்துவம் படித்து வரும் 800 மாணவர்கள் கொரோனா லாக்வுடனால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிர்கிஸ்தானில் பிஸ்ஹெக் நகரில் உள்ள 4 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் கிர்கிஸ்தானில் லாக்டவுன் அமலில் உள்ளது.

கொரோனா லாக்வுடன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இந்திய அரசு வந்தே பாரதம் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது.  அதுபோல  கிர்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டு அங்கிருந்து கொச்சி, டெல்லி, ஹைதராபாத்  நகரங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அங்கிருந்து தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் பொன்.கவுதம் சிகாமணி (Dr pon.gauthamsigamani M.S (ortho) ,MP) தமிழக முதல்வர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

More articles

Latest article