மணமகள்கள் விற்பனை: விலை ரூ.50 ஆயிரம் முதல்…! எங்கே?

ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகாத பெண்களின் விலை ரூ.50 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹடோதி பகுதியில்  திருமணமாகாத பெண்கள் ரூபாய் 50,000 முதல் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 94.5 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்ற விகிதாரச்சத்தில்தான் குழந்தை பிறப்பு இருந்தது வருகிறது. இது மேலும் குறைந்து தற்போத  92.7 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்ற விகிதமாக வீழ்ச்சியடைந்தது. பஞ்சாப், ஹரியானா, குஜராத், மற்றும் மகாராஷ்டிராபோன்ற இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் பெண்-ஆண் விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தானில் மாநிலத்தில் ஆண்- பெண் மக்கள் தொகை நிலையற்று இருப்பதால் அங்கு பெண்களின் பிறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது.

இதன் காரணமாக ஆண்களின்  திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது கேள்விகுறியாகி உள்ளது. இதையடுத்து பெண்களின் விலை மார்க்கெட்டில் உயர்ந்து வருகிறது.

திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளதாக திருமண தரகர்கள் கூறி உள்ளனர்.

மணமகளின் அழகுக்கு தகுந்தவாறு 50,000 ரூபாய்  முதல் ஒரு லட்சம் வரை  பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹடோதி பகுதியில் மணமகள்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் இந்த போக்கு கோட்டா, பூந்தி, ஜாலாவார் மற்றும் பரான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹடாதி பகுதியின் கிராமப்புற மற்றும்  நகர்ப்புற பகுதிகளில் பெண்கிளின் விற்பனை அதிகமாக பரவி வருகிறது. பல்வேறு சமூகத்தினரும் மணமகளை விலைகொடுத்து வாங்கியே தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதேபோல் அண்டை மாநிலங்களில் இருந்தும், மணமகள்களை நல்ல விலை கொடுத்து வாங்கி வருவதாகவும், புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் இந்த ஆண் பெண் விகிதாச்சார மாறுபாடு எங்கு போய் முடியுமோ என்று கேள்வி எழுந்துள்ளது.


English Summary
Brides price from Rs. 50000 onwards ...! Where?