ரூபாய் நோட்டு பிரச்னையால் தினமும் மண்டை உடைகிறது.. சந்திரபாபு நாயுடு புலம்பல்

Must read

விஜயவாடா: பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ஆதரவாளரான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மோடி கொண்டு வந்த பணமதிப்பிறக்க அறிவிப்பை மிகவும் வரவேற்றார். ரூ. 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட தான் பல முறை பிரதமரை வலியுறுத்தியதாகவும் கூறி வந்தார். ஆனால் தற்போது அவரே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சி ஒன்று நேற்று நடந்தது. அப்போது, அவர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறுகையி, கடந்த 40 நாட்களாக பணமதிப்பிறக்கத்தால் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். பிரச்னைகளை தீர்க்க எவ்வளவு முயற்சி செய்தாலும், தீர்வு ஏற்படவில்லை. வங்கி, ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாததால் அடிப்படை தேவைகளைகூட தினமும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
தினமும் 2 மணி நேரம் இந்த பிரச்னையை எதிர்கொள்வதற்காக செலவிட வேண்டியிருக்கிறத. தீர்வுக்காக எனது மண்டையை தினமும் உடைத்துக் கொள்கிறேன். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. எனது மாமனார் ஆட்சியில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது போன்ற பண பிரச்னை மாநிலத்தில் ஏற்பட்டது. அப்போது 30 நாட்களில் அது சரிசெய்யப்பட்டது. ஆனால் தற்போது 40 நாட்களை கடந்தும் பிரச்னை உள்ளது.. என்று கூறியுள்ளார்.
 
Breaking My Head Daily Says Chandrababu Naidu On Notes Ban That He Had Backed

More articles

Latest article