ரியோடிஜெனிரோ:
பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்து பிரேசில் விமான நிலையம் வந்தனர். ஆனால் அவர்கள் அமெரிக்கா செல்ல பிரேசில் நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
ஏற்கனவே அமெரிக்க வீரர்கள் தங்களது உடைமைகளை போலீஸ் உடையில்  வந்த சிலர் கொள்யைடித்து விட்டனர் என புகார் அளித்திருந்தனர். இது போலியானா புகார் என்று  பிரேசில் போலீசார் கூறினார் , அது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை என தங்கள் விசாரரணையில் தெரியவந்துள்ளது என நீதி மன்றத்தில் தெரிவித்தனர்.இதையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டியது உள்ளதால், அவர்கள் நாடு திரும்ப தடை விதித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
olympic
இதுவரை நடைபெற்ற  ஒலிம்பிக்கில் 12 முறை பதக்கம் வென்ற நீச்சல் வீரர் ரியான் லோசட்டின் குழுவில் இருக்கும் ஜேக் கோங்கர் மற்றும் கன்னர் பென்ட்ஸ் உடன் பல வீரர்களும் இதன் காரணமாக பிரேசிலில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
முன்னதாக லோசிட்டி கூறுகையில், தாங்கள் போடியில் கலந்துகொண்டு, ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பி கொண்டிருக்கும்போது, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறினார்.
இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு லோசிட்டி பேட்டியளித்தார். அப்போது, “விளையாட்டை முடித்து விட்டு  நாங்கள் காரில் ஒலிம்பிக்  கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் எங்கள் காரை மடக்கி நிறுத்தினர்.
காரை நிறுத்தியவுடன் துப்பாக்கியை என் நெற்றியில் வைத்து கொள்ளை யடித்தனர்” என கூறினார். விசாரணை முடியும்வரை அமெரிக்க நீச்சல் வீரர்கள் யாரும் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார்கள் என அவர்களது வழக்கறிஞர் கூறினார்.