ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்ஸோனரோ, இன்னும் கொரோனா பாசிடிவ் நிலையிலேயே இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஜூலை 7ம் தேதியே தகவல் வெளியானது. மேலும், ஜூலை 15ம் தேதி ஃபாலோ-அப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, ஜூலை 21ம் தேதியான நேற்று வெளியான தகவலில், அதிபருக்கு இன்னும் பாசிடிவ் நிலையே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அவரின் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், உலக சுகாதார நிறுவனத்தினுடைய தகவலின்படி, ஒரு சாதாரண தொற்று உள்ளவருக்கு, கொரோனா அறிகுறிகள் வெளிப்படத் துவங்கிய காலம் முதல், மருத்துவரீதியாக குணமடைதலுக்கு இடைபட்ட அவகாசம் 14 நாட்கள் என்பது கவனிக்கத்தக்கது.