சென்னை: தனியார் ஊடகத்தில் ‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் தனியார்  தொலைக்காட்சி ஒன்றில், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்  என்ற நிகழ்ச்சியில் பெரியார் வேடத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்று ஒளிபரப்பானது. அந்த நாடகத்தில், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா?  என பல கேள்விகளுக்க விடையளிக்கும் விதமாக அந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து உரையாடினார்.  சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வாழ்த்து பெற்றனர்.

[youtube-feed feed=1]