கேரள மாநிலம் கண்ணூர் அருகில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்த சிறுவன் அங்குள்ள சோர்கலா பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு குறுகலான தெருவில் இருந்து சைக்கிளில் வேகமாக நெடுஞ்சாலைக்கு வந்த அந்த சிறுவன் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த பைக்கை கவனிக்காமல் அதன் மீது மோதினான்.

பைக் மீது சைக்கிள் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சாலையின் மறுபுறம் சென்று விழுந்தான்.

அவனது சைக்கிள் மீது பைக்கிற்கு பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த பஸ் ஏறி இறங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் சிறு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.

இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்ததால் அந்த சிறுவன் உயிர்பிழைத்ததை அந்த பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியமுற்றனர்.